×

இலவச சைக்கிள் வழங்கும் விழா

காரைக்குடி, டிச. 12: காரைக்குடி எஸ்எம்எஸ்வி ஆண்கள், பெண்கள் பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் வள்ளியப்பன் வரவேற்றார். சட்டமன்ற காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் கேஆர். ராமசாமி எம்எல்ஏ மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். விழாவில் சங்கராபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் மாங்குடி, தொழில் வணிகக்கழக முன்னாள் தலைவர் முத்துபழனியப்பன், நகர தலைவர் பாண்டி, அண்டக்குடி கதிரவன், எஸ்ஆர் கல்விகுழும தலைவர் சித்திக், மனித உரிமை பிரிவு மாவட்ட தலைவர் ரமேசு, நகர வர்த்த காங்கிரஸ் நகரதலைவர் ஜெயபிரகாஷ், நகர பொருளாளர் கனிமுகமது, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்தி, நிர்வாகிகள் ரயில்வே தட்சிணாமூர்த்தி, சீனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : bicycle delivery ceremony ,
× RELATED இலவச சைக்கிள் வழங்கும் விழா