×

கொங்கு இளைஞர் பேரவை எஸ்.பி.,யிடம் மனு

ஓமலூர், டிச.12:  சேலம் மாவட்ட தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் சார்பில் சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுகுமார் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு சென்று, எஸ்.பி. அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:
சமூக ஊடகங்களில் ஒருசில நபர்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்களை தவறாக சித்தரித்து பேசி வருகின்றனர். மேலும், அவர்களை அச்சுறுத்தும் வகையிலும், மிரட்டும் வகையிலும் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலமாக பேசி வருகின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஜாதிய மோதலை தூண்டும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Kongu Youth Council ,SB ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில்...