×

தொட்டியம் அருகே காலாவதி குளிர்பான பாட்டில்கள் குளத்தில் கிடந்ததால் பரபரப்பு

தொட்டியம், டிச. 12: தொட்டியம் அருகே முருங்கை கிராமத்தில் காலாவதியான குளிர்பான பாட்டில்கள் குளத்தில் கொட்டி கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் அருகில் முருங்கை கிராமத்தில் ஊருக்கு ஓதுக்கு புறமாக மழைக்காலங்களில் தண்ணீரை தேங்கும் வகையில் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குளத்தில் காலாவதியான 200க்கும் மேற்பட்ட குளிர்பான பாட்டில்கள் அட்டை பெட்டியோடு கொட்டப்பட்டிருந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் குளிர்பான பாட்டில்களை எடுத்து பார்த்தபோது காலாவதியான தேதியோடு இருந்ததால் பாட்டில்களை யாரும் எடுத்து பயன்படுத்தவில்லை.  இது குறித்து அப்பகுதியை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் கூறும்போது, கடைகளில் விற்கப்படும் உணவு பண்டங்களை காலாவதி தேதி என்ன என்பதை பார்த்து விற்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு குளிர்பானங்களை கொடுப்பதற்கு முன்னர் தரமானதாக உள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். சுமார் 200க்கும் மேற்பட்ட குளிர்பான பாட்டில்கள் காலாவதி ஆகிவிட்டதால் யாரோ லோடு ஆட்டோவில் கொண்டு வந்து கொட்டி விட்டு சென்றுள்ளனர். தொட்டியம் காட்டுப்புத்தூர் பகுதியில் உள்ள கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை சுகாதார துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.


Tags :
× RELATED நவல்பட்டு வாக்குசாவடியில் வாக்கு...