×

ஒட்டன்சத்திரத்தில் ஜல்லியோடு நிற்கும் சாலை பணி பொதுமக்கள் அவதி

ஒட்டன்சத்திரம், டிச. 12:  ஒட்டன்சத்திரம் 12வது வார்டில் சாலைப்பணி கடந்த 2 மாதமாக ஜல்லிக்கற்கள் கொட்டியதோடு நிற்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் நகராட்சி 12வது வார்டுக்குட்பட்டது கஸ்தூரி நகர். இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து மின்மயானம் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் இச்சாலை சேறும், சகதியுமாக மாறி புதைகுழி போல் மாறி விடும். இதனால் பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று நகராட்சி நிர்வாகம் சாலை அமைக்கும் பணியை துவக்கியது. இதற்காக 2 மாதங்களுக்கு முன்பு சாலை பணிக்காக ஜல்லிக்கற்களை கொட்டி சென்றனர். அதன்பின் எந்த பணியும் நடக்கவில்லை. இதனால் அவ்வழியே செல்லும் மாணவ, மாணவிகள், விவசாயிகள், வியாபாரிகள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் நடந்து மற்றும் வாகனங்களில் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ஜல்லிக்கற்களை கொட்டி 2 மாதங்களாகி விட்டது. இதுவரை எந்த பணியும் நடக்கவில்லை. டூவீலர்களில் செல்வோர் கற்களால் வாரிவிட்டு கீழே விழுகின்றனர். சாலை பணி கிடப்பால் இப்பகுதிக்கு வரும் மினிபஸ் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அருகிலுள்ள பகுதிகளுக்கு நடந்த செல்லும் அவலநிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் சாலைப்பணியை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

குடிநீரும் பிரச்னையா இருக்கு

மேலும் இப்பகுதியினர் கூறுகையில், ‘‘கஸ்தூரிநகரில் சில மாதங்களாக மின்மோட்டார் அடிக்கடி பழுதடைந்து வருகிறது. இதனால் போர்வெல் மற்றும் நகராட்சி பைப்லைனில் இருந்து வரும் குடிநீர் சரிவர சப்ளை செய்ய முடியவில்லை. இதனால் விலைக்கு வாங்கி தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் குடிநீர் பிரச்னைக்கும் நிரந்தர தீர்வு காண வேண்டும்’’ என்றனர்.

Tags : road ,Jallian ,
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...