×

தொட்டபெட்டா சாலையில் அபாயகர மரங்களை அகற்ற வனத்துறைக்கு வலியுறுத்தல்

ஊட்டி, டிச. 12:  ஊட்டி தொட்டபெட்டா சாலையில் அபாயகரமாக விழும் நிலையில் உள்ள மரங்களை வனத்துறை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு வகையான சுற்றுலா தளங்கள் உள்ளன. இங்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் பூங்காக்களுக்கு மட்டும் சென்று வராமல் இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியை ஒட்டியுள்ள சுற்றுலா தளங்களான அவலாஞ்சி, பைக்காரா, தொட்டபெட்டா போன்ற இடங்களுக்கும் சென்று வருகின்றனர். ஊட்டி - கோத்தகிரி சாலையில் இருந்து சுமார் 5 கி.மீ., தொலைவில் தொட்டபெட்டா மலைசிகரம் அமைந்துள்ளது. இதில் சிகரத்திற்கு செல்ல கூடிய சுமார் 2 கி.மீ., தூர சாலை வனத்துறையின் கட்டுபாட்டில் உள்ளது.

இச்சாலையின் இருப்புறமும் உயர்ந்த கற்பூர மரங்கள் உள்ளிட்டவைகள் உள்ளன. அவ்வப்போது காற்று காரணமாக இவை சாலையில் விழுகின்றன. மேலும் மரங்கள் தொங்கிய நிலையில் காணப்படுகின்றன. இதனால் தொட்டபெட்டா செல்லும் வாகனங்கள் மீது இவை விழந்து உயிரிழப்பு  ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தொட்டபெட்டா சாலையில் காணப்படும் அபாயகர மரங்களை வனத்துறையினர் உடனே வெட்டி அகற்றிட வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தினர்.

Tags : Forest Department ,road ,Dodabetta ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...