×

விஏஓ.,க்கள் வேலைநிறுத்தம்

திருப்பூர், டிச.12:பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொது மக்களுக்கு நேற்று நோட்டீஸ் விநியோகம் செய்தனர். தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும். மாவட்ட இடமாறுதல் வழங்க வேண்டும். வி.ஏ.ஓ., டிஜிட்டல் கையொப்பத்துடன் `இ-அடங்கல்’ வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 10ம் தேதி முதல் கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் குறித்து பொது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர்கள் நோட்டீஸ் வழங்கினர்.வெள்ளக்கோவில் : நேற்று வெள்ளக்கோவில் நில வருவாய் அலுவலகம் முன்பு, சங்க தலைவர் சொக்கர் தலைமையில் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.  இன்று (12ம் தேதி) நத்தக்  காடையூர் கிராம அலுவலகம் முன்பு வேலை நிறுத்தம் செய்வதாகவும், 13ம் தேதி காங்கயம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

Tags : Strikes ,
× RELATED ஏமனில் ஹவுதி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்