×

மகள்களுக்கு திருமணம் செய்ய முடியாத விரக்தி டிக்கெட் பரிசோதகர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: கடன் பிரச்னையால் இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் அரசு பஸ் டிக்கெட் பரிசோதகர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு சின்ன மேலமையூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் மணி (53). செங்கல்பட்டு அரசு பணிமனையில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு 3 மகள்கள். ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில், 2 மகள்களுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாமல் மணி தவித்தார். ேமலும் ஏற்கனவே வாங்கிய கடனையும் ெகாடுக்க முடியாமல் தவித்தார். கடன் கொடுத்தவர்கள், பணத்தை கேட்டு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் மணி மனமுடைந்து காணப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற மணி, வெகு நேரமாக வெளியே வரவில்லை. உடனே மனைவி மற்றும் மகள்கள் கதவை தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது, மின் விசிறியில் மணி தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Ticket Inspector ,suicide ,daughters ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை