×

2 மகளுக்கு திருமணம் செய்ய முடியாத விரக்தியில் டிக்கெட் பரிசோதகர் தற்கொலை

செங்கல்பட்டு, டிச. 12: கடன் பிரச்னையால் இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் அரசு பஸ் டிக்கெட் பரிசோதகர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது செங்கல்பட்டு சின்னமேலமையூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் மணி (53). செங்கல்பட்டு அரசு பணிமனையில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பாரதி, காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 மகள்கள். ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது.

இந்நிலையில் 2 மகள்களுக்கு திருமணம் செய்ய முடியாமல் மணி தவித்தார். ேமலும் ஏற்கனவே வாங்கிய கடனையும் ெகாடுக்க முடியாததால் பணம் கொடுத்தவர்கள், திரும்ப கேட்டு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். இதனால் மணி மனமுடைந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற மணி, வெகுநேரமாக வெளியே வரவில்லை. உடனே மனைவி மற்றும் பிள்ளைகள், கதவை தட்டினர். திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கினார். இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். உடனே மணியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் மணி இறந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தார். இதுபற்றி செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : ticket examiner suicide ,
× RELATED டிக்கெட் பரிசோதகர் தற்கொலை