×

கஜா புயலால் சாய்ந்தகஜா புயலால் சாய்ந்த தேக்கு மரங்களை வெட்டி அகற்ற சான்றிதழ் பெற மக்கள் கடும் அவதி

நாகை. டிச.11: வங்க கடலில் ஏற்பட்ட புயல் புயலாக மாறி நவம்பர் 15ம் தேதி நள்ளிரவு நாகை & வேதாரண்யம் இடையே கரையை கடந்தது.
இதனால் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தது. மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது.  வீட்டு தோட்டத்தில் வளர்க்கப்படும் தேக்கு மரத்திற்கு வனத்துறை சான்றிதழ் வேண்டும். கஜா புயலில் வீட்டு தோட்டங்களில் வளர்க்கப்பட்ட தேக்கு மரம் சாய்ந்துள்ளது. வீட்டு தோட்டங்களில் தேக்கு மரம் வளர்த்தால் வனத்துறைக்கு தெரிவித்து சான்றிதழ் பெற்றால் தான் மரத்தை வெட்டும்போது ஆலையில் மரத்தை அறுக்க முடியும். பொதுவாக வீட்டு தோட்டத்தில் இரண்டு மரம் 5 மரம் என்று வளர்க்கப்படுகிறது. இந்த மரத்தை வனத்துறையிடம் பதிவு செய்ய யாரும் முயற்சி எடுப்பதில்லை.

இந்நிலையில் எதிர்பாராமல் வீட்டு தோட்டத்தில் கஜா புயலில் விழுந்த தேக்கு மரத்தை வனத்துறை சான்றிதழ் பெற முடியாமல் பொது மக்கள் உள்ளனர்.  மக்களுக்கு வனத்துறை அலுவலகம் எங்கு உள்ளது எப்படி அனுகுவது என்று தொரியாத நிலையில் வீட்டு தோட்டத்தில் சாய்ந்துள்ள தேக்கு மரத்தை வெட்டி அப்புரப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். அனைத்து கிராமங்களிலும் தேக்குமரங்கள் சாய்ந்துள்ளதால் வனத்துறை அதிகாரிகள் கிராமங்கள் தோறும் முகாம் அமைத்து சாய்ந்துள்ள தேக்கு மரத்திற்கு சான்றிதழ் வழங்கிட ஏற்பாடுகளை நாகை மாவட்ட நிர்வகம் ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என்று தேக்கு மரம் வைத்துள்ளவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கஜா புயல் தாக்கி 25 நாள் ஆன பின்னரும் புயலால் சாய்ந்த தேக்க மரத்தை வெட்டாமல் என்ன செய்வது என்று தெரியாத பொது மக்களுக்கு வனத்துறை உதவி செய்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : flooding ,
× RELATED தேனி அணைப்பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு..!!