×

முதல்வர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

புதுச்சேரி, டிச. 11: புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
 உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் நியமன எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை முதல்வரின் பாராளுமன்ற செயலர் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் நீதித்துறை தலையிட முடியாது என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, தீர்ப்பை விமர்சித்த லட்சுமிநாராயணன் எம்எல்ஏவின், முதல்வரின் பாராளுமன்ற செயலர் பொறுப்பை பறிக்க வேண்டும் என கவர்னரிடம் புகார் கொடுத்துள்ளோம். இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்திடமும் புகார் அளிக்க உள்ளோம். மேலும், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து முதல்வர், முதல்வரின் பாராளுமன்ற செயலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம். இதுதொடர்பாக கட்சி தலைமையிடம் கலந்தாலோசிப்போம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : court ,
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...