×

ராசிபுரத்தில் ₹40 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ராசிபுரம், டிச.11: ராசிபுரம் வேளாண்மை விற்பனை கூடத்தில் பருத்தி ₹40 லட்சத்திற்கு ஏலம் போனது.   ராசிபுரம் கூட்டுறவு வேளாண்மை விற்பனை கூடத்தின் (ஆர்சிஎம்எஸ்) சார்பில், கவுண்டம்பாளையத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், வடுகம், பூசாரி பாளையம், காக்காவேரி, சிங்களாந்தபுரம், நத்தமேடு, கண்ணூர்பட்டி, கவுண்டம்பாளையம், சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 1864 மூட்டை பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர். ஆர்சிஎச் குவிண்டால் அதிகபட்சம் ₹6,339க்கும், குறைந்தபட்சம் ₹5,600க்கும், டிசிஎச் அதிகபட்சம் ₹6,990க்கும், குறைந்தபட்சம் ₹6,599க்கும் ஏலம் போனது.

அவிநாசி, அன்னூர், சேலம், கொங்கணாபுரம், எடப்பாடி, மகுடஞ்சாவடி, ஆத்தூர், தேனி, திண்டுக்கல்,  கோவை, எருமப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். மொத்தம் 1864 மூட்டை பருத்தி ₹40 லட்சத்திற்கு ஏலம் போனது.  

Tags : Cotton auction ,Rasipuram ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து