×

‘கஜா மரங்களை’ அகற்ற தாலுகாக்களில் சிறப்பு வசதி

திண்டுக்கல், டிச. 11: புயலில் சாய்ந்த மரங்களை அகற்றுவதற்காக பட்டாதாரர்கள் விண்ணப்பிக்க தாலுகா அலுவலகங்களில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி கஜாபுயல் ஊடுருவியது. இதனால் மலைப்பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டது. குறிப்பாக கொடைக்கானலில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து சரிந்தன. இவற்றை அகற்றக்கோரி பட்டதாரர்கள் மனு அளித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் பட்டதாரர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், மொத்த மர வியாபாரிகள், அறுவை மில் உரிமையாளர்கள், வனத்துறை உள்ளிட்டோர் அடங்கிய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பட்டாநிலங்களில் புயலினால் சாய்ந்த மரங்களை அகற்ற சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து மனுக்களைப் பெற கொடைக்கானல், ஆத்தூர், திண்டுக்கல் கிழக்கு-மேற்கு தாலுகாக்களில் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. எனவே புயலினால் சாய்ந்த மரங்களை அகற்ற வரும் 12ம் தேதிக்குள் இந்த வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு கலெக்டர் வினய் கேட்டு கொண்டுள்ளார்.

Tags : facility ,taluks ,
× RELATED ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை,...