×

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர், டிச. 11: திருவள்ளூரில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணிக்கு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை வகித்து துவக்கிவைத்தார். சப் - கலெக்டர் டி.ரத்னா, மாவட்ட செயற்பொறியாளர் கிருபானந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி சி.வி.நாயுடு சாலை, ஜெ.என்.சாலை என முக்கிய வீதிகள் வழியாக சென்று தாலுக்கா அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதில், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்ற பள்ளி மாணவ, மாணவியர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், துப்புரவு பணியாளர்கள் என  300க்கும் மேற்பட்டோர், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து கோஷமிட்டனர்.

உயிரினங்களுக்கும், மண்ணுக்கும் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என துண்டு பிரசுரங்களை வழங்கி  மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், நகராட்சி ஆணையர் முருகேசன் உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...