மனிதநேயத்துடன் மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு வர்த்தக கழகம் தீர்மானம்

முத்துப்பேட்டை, டிச.7: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வர்த்தகக்கழகக் மாதாந்திர செயற்குழு கூட்டம் தலைவர் மெட்ரோமாலிக் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் ராஜாராம் அறிக்கை வாசித்தார். துணைத்தலைவர் கண்ணன் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மங்கள் வருமாறு:
கடந்த 15ம்தேதி நள்ளிரவு கஜா புயலால் முத்துப்பேட்டை பகுதி முற்றிலும் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வியாபாரிகள் தங்களது பொருட்கள் மற்றும் பொருளாதரம் உட்பட வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால் முத்துப்பேட்டை முழுவதும் மரங்கள் கூரைகள் விழுந்து மக்கள் நடமாட கூட முடியாத அளவில் சின்னாபின்னமாகி கிடக்கிறது.

இதனை போலீசார், வருவாய்த்துறை, தீயணைப்பு துறை பேரூராட்சி,  மின்சார வாரியம், வனத்துறை என அனைத்து துறை அரசு பணியாளர்கள், தன்னார்வலர்கள் என  பல்வேறு அமைப்பினர் துரிதமாக மீட்பு பணி மேற்கொண்டு முத்துப்பேட்டையை சகஜ நிலைமைக்கு கொண்டு வந்தது மிகப்பெரிய பாராட்டுக்குறியது, அவர்களுக்கு வர்த்தக கழகம் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறது. கூட்டத்தில் துணைத்தலைவர் நெய்னா முகமது,  துணைச்செயலாளர்கள் கிஷோர், அருண்சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் சகாப்தீன், பேட்டை ராஜேஷ் கண்ணா, கலையரசன், அந்தோணி ராஜா, சபான் மரைக்காயர், நூருல் அமீன், ஹக்கீம், தாவு+து அடுமை, தியாகு  உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.

Tags :
× RELATED மின்மய பணிகள் முடிவுற்றதால்...