×

மொடக்குறிச்சி அருகே குடிநீரில் அதிக குளோரின் கலப்பு பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி

மொடக்குறிச்சி, டிச 7: மொடக்குறிச்சி அருகே குடிநீர் மேல்நிலைத்தொட்டியில் அதிகளவில் குளோரின் பவுடர் கலக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் உடல் நலன் பாதித்துள்ளதாக கூறி 50க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட முத்துக்கவுண்டன் பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் 240 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் விநியோகிக்கப்ட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக குடிநீரில் குளோரின் பவுடர் அதிகம் கலந்ததால் குடிநீர் நாற்றம் வீசியது.

இதனை குடித்த முரளி என்பவரது மகள் தேசிகா (11) வயிற்கு போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே போல் மாணிக்கம் என்பவரது மகன் அருள்வசந்த் (8), பாபு மகன் யுவராஜ் (9) உள்ளிட்ட ஏராளமானோர் உடல் உபாதைகளுக்கு ஆளாகி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முத்துக்கவுண்டன்பாளையம் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈரோடு  முத்தூர் ரோட்டில் முத்துக்கவுண்டன் பாளையம் ரிங்ரோட்டில் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அங்கு வந்த மொடக்குறிச்சி போலீசார் மற்றும் மொடக்குறிச்சி பி.டி.ஓ.,சாந்தி சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மேல்நிலைத் தொட்டியில் உள்ள தண்ணீரை வெளியேற்றிவிட்டு மீண்டும் தண்ணீர் நிரப்பி அளவான குளோரின் பவுடர் கலந்து குடிநீர் வினியோகிக்கப்படும் என உறுதி அளித்ததின்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : population ,Motakurichi ,
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...