×

காயல்பட்டினத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ஆறுமுகநேரி, டிச.6: காயல்பட்டினத்தில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.   காயல்பட்டினம் நகராட்சி மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடத்தியது. சென்ரல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த பேரணி துவக்க விழாவுக்கு மாவட்ட கல்வி அலுவலர் திருச்செந்தூர் லெட்சுமணசாமி தலைமை வகித்தார்.  காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் சுரேஷ், சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜன், தூத்துக்குடி மாவட்ட தேசிய பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் வெள்ளச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் செய்யது அப்துல்காதர் வரவேற்று பேசினார். பள்ளிச் செயலாளர் நயினார் சாகீபு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டினார். தொடர்ந்து  மாணவர்களின் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

 இப்பேரணியில் சென்ரல் மேல்நிலைப்பள்ளி, எல்.கே. மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த  பசுமைபடை மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள், செஞ்சிலுவை சங்க மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும்  துணிப்பைகள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் பென்சர், குமரி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், நிர்வாகி சோபா, தேசிய பசுமைபடையை சேர்ந்த பெண்கள். நகராட்சி அதிகாரிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kayalpattinam ,
× RELATED 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி...