திருப்புத்தூரில் அதிமுகவினர் மவுன ஊர்வலம்

திருப்புத்தூர், டிச.6: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரண்டாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி திருப்புத்தூரில் நேற்று அதிமுகவினர் மவுனஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.திருப்புத்தூர் காந்திசிலையில் இருந்து மதுரை ரோடு வழியாக அண்ணாசிலை வரை மவுனஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்கு மவுன அஞ்சலி செலுத்தி ஜெயலலிதாவின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், நகர செயலாளர் இப்ராகிம்ஷா, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ஏவி.நாகராஜன், துவார் மூர்த்தி, முன்னாள் யூனியன் சேர்மன் கரு.சிதம்பரம், ஜெ,பேரவை ஒன்றிய தலைவர் புதுத்தெரு முருகேசன், ஒன்றிய துணைச் செயலாளர் முருகேசன், வழக்கறிஞர்கள் ரவீந்திரன், ராஜசேகர், தலைமை கழக பேச்சாளர் அப்துல் வாஹித் மற்றும் மகளிரணியின, மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் தென்மாபட்டு பகுதியில் மரக்கன்றுகளை நட்டனர்.

× RELATED திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் ஆலங்கட்டி மழை