×

கல்வியால் மட்டுமே சாதிக்க முடியும் கேஆர்.ராமசாமி எம்எல்ஏ அட்வைஸ்

காரைக்குடி, டிச. 6: கல்வியால் மட்டுமே வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைய முடியும் என சட்டமன்ற காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் கேஆர்.ராமசாமி எம்எல்ஏ தெரிவித்தார்.காரைக்குடி அருகே மித்ராவயல் அரசு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு வரவேற்றார். மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி சட்டமன்ற காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் கேஆர்.ராமசாமி பேசுகையில், ‘பள்ளிக்கு சரியான நேரத்தில் வரவேண்டும் என்பதற்காவே பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படுகிறது.

சரியான முறையில் நேரத்தை திட்டமிடுதல் வேண்டும். நேரத்தை சிறந்த முறையில் செயல்படுத்த வேண்டும். டி.வி. செல்போன் மற்றும் சமூக வலைதளங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை குறைத்து கொண்டால் மட்டுமே தேர்வில் நல்ல மார்க் பெற முடியும்.எந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் கல்வியை இடை நிறுத்தம் செய்யக்கூடாது. நமக்கு நல்ல நண்பர் கல்விதான். காலை முதல் மாலை வரை ஏதாவது ஒரு வகையில் படிக்க வேண்டும். நூலகத்திற்கு சென்று வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் படிப்பை போல் சமூக பொறுப்பு என்பது மிக முக்கியம்.

கல்வியால் மட்டுமே நாம் நினைக்கின்ற உயர்ந்த இடத்தை அடைய முடியும்’ என்றார். நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் குணசேகரன், வட்டார காங்கிரஸ் தலைவர் செல்வம், காங்கிரஸ் நிர்வாகிகள் அண்டக்குடி கதிரவன், பாப்பகுடிராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை...