×

வத்தலக்குண்டுவில் பள்ளி முன்பு இறைச்சிக்கடைகள் நோய் பரவும் அபாயம்

வத்தலக்குண்டு, டிச. 6: வத்தலக்குண்டுவில் பள்ளி முன்பு 10 இறைச்சிக்கடைகள் உள்ளன. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வத்தலக்குண்டு மதுரை சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் தனியார் பள்ளி உள்ளது. பள்ளியையொட்டி கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ளன. இப்பள்ளியின் முன்பாக 10 ஆட்டு இறைச்சி கடைகள் உள்ளன. அக்கடையினர் இறைச்சி கழிவுகளை அப்பகுதியில் வி்ட்டு செல்வதால் பன்றிகள், நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் மாணவர்களுக்கு பல்வேறு நோய் பரவும் அபாயம் உள்ளது.

மேலும் இரவில் மாமிச கடைகள் மது பார்களாக உருமாருகின்றன. அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி வந்து இரவில் காலியாக உள்ள இறைச்சி கடைகளில் கும்பல் கும்பலாக மது அருந்துகின்றனர். இதனால் பள்ளி முன்புறம் குப்பைகள் குவியல் குவியலாக உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அகற்ற வேண்டிய சேவுகம்பட்டி பேரூராட்சியினர் குப்பைகளை குவிக்கும் இறைச்சி கடைக்காரரிடம் கட்டணம் வசூலிக்கின்றனர்.

இதனால் பள்ளிப்பகுதியில் சுகாதாரம் சீர்கெட்டு துர்நாற்றம் வீசுகிறது. எனவே சேவுகம்பட்டி பேரூராட்சியினா் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பள்ளி மாணவர்களும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர் அசோக்குமார் கூறுகையில், ‘இரவு நேரங்களில் இறைச்சி கடைகளில் கும்பல் கும்பலாக உட்கார்ந்து குடித்து கும்மாளம் அடிக்கும் குடிமகன்களை பார்த்து சர்ச்க்கு செல்லும் பெண்கள் அச்சமடைகின்றனர். மேலும் பள்ளி மாணவர்கள் அடிக்கடி நோய் ஏற்படடு அல்லல் படுகின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் சுகாதாரத்தை மீட்க வேண்டும்’ என்றார்.

Tags : school ,spread ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி