×

நல்லம்பள்ளியில் ஒன்றிய திமுக உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கல்

தர்மபுரி, டிச.6:  நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், நேற்று புதிய உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கப்பட்டது. நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், 15வது அமைப்பு தேர்தலை முன்னிட்டு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா, நேற்று நல்லம்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ தலைமை வகித்து, புதிய உறுப்பினர்களுக்கான அட்டைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். அறந்தாங்கி தீன், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் சக்தி ராமசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் பச்சியப்பன், பொன்னுசாமி, துரைசாமி, மகளிர் அணி முத்துலெட்சுமி, அமிர்தம், தொண்டரணி பழனிசாமி, அவைத்தலைவர் வீரமணி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் துரைராஜ், சக்திவேல், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...