×

கஜா புயலால் சாய்ந்த சவுக்கு மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் ேகாரிக்ைக

வேதாரண்யம்,டிச.6: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கருப்பும்புலம், ஆயக்காரன்புலம், குரவப்புலம், தேத்தா குடி கத்தரிபுலம், நெய்விளக்கு உள்ளிட்ட கிராமங்களில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சவுக்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதி விவசாயிகளுக்கு முக்கிய வாழ்வாதரங்களில் ஒன்றான சவுக்குமரங்கள் கணிசமான வருவாயை தரும் மரமாக உள்ளது. நடவு செய்யப்பட்ட 5 முதல் 6 ஆண்டுகளில் மரங்களை விற் பனை செய்யலாம். இவை கட்டுமானங்கள், அனல்மின் நிலையங்கள் மற்றும் விறகு தேவை களு க்கு கொள்முதல் செய்யப்படுகின்றன. ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சவுக்குமரங்கள் சுமார் ரூ.3லட்சம் வரையிலும் விலை போகும். மேலும் சவுக்கு தழைகளை ஆதாரமாக கொண்டு பல குடும்பங்கள் வெள்ளாடுகள் வளர் க்கப்படுகிறது. இந்த நிலையில் சவுக்குமரங்களை கஜாபுயல் சூறையாடி நடுத்தர விவசாயி களின் வாழ்வாதரம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஜாபுயலால் முறிந்து முழுமையாக சேதம் அடைந்த சவுக்கு மரங்களை தனியார் கம்பெனிகள் கொள்முதல் செய்ய வாய்ப்பு குறைவு. அப்படியே கொள்முதல் செய்தாலும் குறைந்த தொகைக்கே வாங்குவார்கள். புயலால் சேதம் அடைந்த சவுக்கு மரங்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு இன்னும் அறிவிக்க வில்லை. அரசு உடனே நிவாரணத்தை அறிவித்து வழங்க வேண்டும். அத்துடன் மீண்டும் உற்பத்தியை தொடங்கவும் அரசு உதவ வேண்டும் என சவுக்குவிவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : storm ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...