×

கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் மழையால் சேறும், சகதியுமான சாலையால் மக்கள் அவதி

கந்தர்வகோட்டை, டிச.6:  கந்தர்வகோட்டை பேரூந்து நிலையம் நேற்று பெய்த மழையால் சேறும் சகதியுமாக மாறியது. இதனால் பொதுமக்கள் பெரிதும்  அவதிபட்டனர்.கந்தர்வகோட்டையில் உள்ள பழைய பேரூந்து நிலையம் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர்  நிதியிலிருந்து புதுப்பிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பேருந்து நுழைவு மற்றும் பேருந்துகள் வெளியே செல்லும் பகுதியில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை தரைதளம் அமைக்கப்படவில்லை.இதனால்  நேற்று முன்தினம் பெய்த   சாரல் மழைக்கே பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உடனடியாக பேருந்து நிலைய பணிகளை நிறைவேற்ற வேண்டும் என  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus station ,Gandharvatthai ,rainfall ,
× RELATED வடசேரி பஸ் நிலையத்தில் நீர் கசிவு ஆறாக ஓடிய தண்ணீர்