×

தோகைமலை நெசவாளர் காலனியில் சிமென்ட் சாலை அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தோகைமலை,டிச.6: தோகைமலையில் உள்ள நெசவாளர் காலனி தெருவில் கழிவுநீர் வீதிகளில் செல்வதால் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.கரூர் மாவட்டம் தோகைமலையில் உள்ள நெசவாளர் காலனி பகுதிகளில் சுமார் 100குடும்பங்கள் உள்ளது. இந்த தெருவில் 10க்கும் மேற்பட்ட வீதிகள் கொண்டதாக குடியிருப்புகள் அமைந்து ள்ளது. இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 3வீதிகளில் மட்டும் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.ஆனால் சிமென்ட் சாலைகளில் கழிவுநீர் வடிகால் அமைக்காமல் உள்ள தால் சிமென்ட் சாலை ஒட்டி உள்ள அனைத்து வீடுகளிலும் கழிவுநீர் தேங்கி உள்ளது. மேலும்  சிமென்ட் சாலை அமைக் காத வீதிகளில் உள்ள பெரும்பாலான வீடுகளிலும் கழிவுநீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளனர். இதில் ஒரு சில வீடுகளில் இருந்து கழிவுநீரை வீதிகளில் திறந்து விடுவதால் கழிவுநீர் வீதிகளில் செல்கிறது. வீதிகளில் கழிவுநீர் செல்வதால் நடமாடும் பொதுமக்கள் மனச்சங்கடத்துடன் சென்று வருகின்றனர்.  குடியிருப்புகளில் கழிவுநீர் ஆங்காங்கே தேக்கி வைப்பதால் கொசு உற்பத்தி அதிகமாகி வருகிறது. மேலும் வீதிகளில் முறையான வடிகால் வசதிகள் அமைக்காததால் நடுவீதியில் கழிவு செல்கிறது.

 இதனால் நெசவாளர் காலனி பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையில் உள்ளதாக இப்ப குதியினர் தெரிவிக்கின்றனர். மேலும் மழைக்காலங்களில் வீதிகளில் சேறும் சகதியுமாக இருப் பதால் வீதிகளில் நடமாடமுடியாத நிலை ஏற்படுகிறது.நெசவாளர் காலனி பகுதிக்கு சிமென்ட் சாலையும், வடிகால் வசதியும் ஏற்படுத்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.  நெசவாளர் காலனியில் சிமென்ட் சாலை இல்லாத வீதிகளில் சிமென்ட் சாலை அமைக்கவும், அனைத்து வீதிகளுக்கும் வடிகால் வசதிகள் ஏற்படுத்தி கழிவுநீரை வெளியேற்றவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags : cement road ,weaver colony ,
× RELATED ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு...