×

வடசேரி பஸ்நிலையத்தில் இறந்த பெண்ணின் இறுதி சடங்கிற்கு பணம் இல்லாமல் தவிப்பு முன்னாள் கவுன்சிலர் - அதிகாரிகள் உதவினர்

நாகர்கோவில், டிச.6 : வடசேரி பஸ் நிலையத்தில் நரிக்குறவர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து பாசிகள் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களை விற்பனை செய்கிறார்கள். சிலர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துகின்றனர். இவ்வாறு வள்ளியூர் பகுதியை சேர்ந்த அன்னத்தாய் என்ற டியா மோதிரம் (65) என்பவரும், தனது சகோதரர் சண்முகம் மற்றும் உறவினர்களுடன் தங்கி இருந்தார். இந்த நிைலயில் நேற்று காலை 5 மணியளவில் டியா மோதிரம் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது உடலை ெசாந்த ஊருக்கு ெகாண்டு செல்ல பணம் இல்லாமல் பிளாட்பாரத்திலேயே வைத்து இருந்தனர்.

இது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை வடசேரி போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி பீட்டர், கிராம நிர்வாக உதவியாளர் பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் திமுக முன்னாள் கவுன்சிலர் சீத்தாமுருகனும் அங்கு வந்தார். அவர் ஏற்கனவே தங்களது பகுதியில் ஏழை குடும்பத்தினர் யாராவது இருந்தால் அவர்களின் உடலை சுடுகாடு வரை கொண்டு செல்வதற்காக இலவச அமரர் ஊர்தி வைத்துள்ளார். இதையடுத்து அந்த ஊர்தி வரவழைக்கப்பட்டு, டியா மோதிரம் உடல், ஒழுகினசேரியில் உள்ள நகராட்சி சுடுகாடுக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. பணம் இல்லாமல் உடலை கொண்டு செல்ல வழியில்லாமல் தவித்த நரிக்குறவர்களுக்கு உதவி செய்த முன்னாள் கவுன்சிலர் சீத்தா முருகன் மற்றும் அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags : councilor - officers ,bus stand ,Vadasseri ,funeral ,
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி