×

வீட்டில் பதுக்கி வைத்த ₹3 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்

எண்ணூர், டிச.6: அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வடசென்னை பகுதியின் பல இடங்களில் கடைகள் மற்றும் குடோன்களில் பதுக்கி வைத்து, விற்பனை செய்வதாக தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு  தகவல் வந்தது.அதன்பேரில் அதிகாரிகள்இதுவரை பல லட்சம் மதிப்பில் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், எர்ணாவூர் பாரத் நகரில் உள்ள ஒரு வீட்டில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி  வைத்து, பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்வதாக எண்ணூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீசார், நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்று தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் மூட்டை மூட்டையாக பொருட்கள் இருப்பது  தெரிந்தது.இதையடுத்து போலீசார், அதிரடியாக அந்த வீட்டில் நுழைந்து சோதனையிட்டனர். அங்கிருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, அதில் ஹான்ஸ், பான்பராக், மானிக்சந்த் உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டது.இதைதொடர்ந்து அதிகாரிகள், அந்த வீட்டில் இருந்து 50 மூட்டைகளில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ₹3 லட்சம் என கூறப்படுகிறது. மேலும், குட்கா பொருட்களை வீட்டில்  பதுக்கி வைத்த முத்துபாண்டியன் (47), பெரியசாமி (42) ஆகியோரை கைது செய்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED திருவள்ளூர் அடுத்த நுங்கம்பாக்கம்...