×

திருக்கழுக்குன்றம் அடுத்த சுடுகாட்டுப் பாதை பிரச்னை சாலையில் சடலத்தை வைத்து போராட்டம்

திருக்கழுக்குன்றம், டிச.6: திருக்கழுக்குன்றம் அடுத்த குழிப்பாந்தண்டலம் கிராமத்தில்  400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கிராம மக்கள் காலம்காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டு பாதையோடு  சேர்ந்த நிலத்தை சென்னையைச் சேர்ந்த ஒரு தனி நபர் வாங்கி அந்த சுடுகாட்டு பாதையினிடையே சுற்று சுவர் அமைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் இறந்த ஒருவரின் சடலத்தை அந்த சுடுகாடு பாதையில் கொண்டு செல்ல முயன்ற போது அதிகாரிகள் தடுத்தனர். பின்னர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி  இப்பிரச்சனைக்கு சுமூக தீர்வு ஏற்படுத்தி கொள்வது என முடிவு செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்குமான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

 இந்நிலையில் நேற்று இப்பகுதியைச் சேர்ந்த ரோஸ் ( 60) என்ற மூதாட்டி இறந்துப் போன நிலையில் அந்த மூதாட்டியின் உடலை அதே (பழைய) சுடுகாட்டு பாதை வழியாக கொண்டு செல்வதென பொதுமக்கள் முடிவு செய்த  நிலையில் மீண்டும் பதற்றம் நிலவியது. திருக்கழுக்குன்றம் தாசில்தார் வரதராஜன், மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்புராஜ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த சடலத்தை மட்டும் மற்றொரு மாற்று  பாதையில் கொண்டு சென்று அடக்கம்  செய்யுங்கள். இது தொடர்பாக உரிய ஆலோசனை செய்து நிரந்தரமான சுடுகாட்டு பாதை ஏற்படுத்தி தரப்படும் என தெரிவித்தனர். ஆனால் அதை ஏற்க மறுத்த பொதுமக்கள் சடலத்தை சாலையில் வைத்து விட்டனர். அதனால் மீண்டும் பதற்றம்  நிலவியது. அதன் பிறகு தற்காலிகமாக இந்த ஒரு சடலத்தை மட்டும் சுடுகாட்டு பாதையில் போடப்பட்டுள்ள தடுப்பு சுவற்றுக்கு 15 அடிக்கு முன்னரே சடலத்தை எரித்து விட முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு சடலத்தை கொண்டு சென்று  சுற்று சுவருக்கு 15 அடிக்கு முன்னர் சடலத்தை எரித்தனர்.
இந்த சம்பவத்தால் நேற்று காலை முதல் மாலை வரை அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : road ,Thirukkulam ,
× RELATED பழநி கிரிவலப் பாதையில் சுற்றுச்சுவர்...