×

வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த தடை கேட்டு வழக்கு

சென்னை, டிச.5: விசாகபட்டினம் எக்ஸ்பிரஸ் பேசின்பாலம் ரயில் நிலையத்தில் வரும்போது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்கள் போக்குவரத்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.   சென்னை சென்ட்ரலில் இருந்து விசாகபட்டினம் நோக்கி நேற்றிரவு 9.10க்கு விசாகபட்டினம் வாராந்திர விரைவு ரயில் புறப்பட்டது. பேசின் பாலத்தில் 5வது நடைமேடையில் வரும்போது, மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதனால் அங்கேயே நின்று விட்டது.

 திடீரென ரயில் நின்றதால் பயணிகள் திகைத்தனர். நடைமேடையில் இறங்கி நின்றனர். மின்கம்பி அறுந்து விழுந்ததை அறிந்ததும் ரயில்வே அதிகாரிகளும் அங்கு வந்தனர். உயர் அழுத்த மின்கம்பி விழுந்தால் ரயில் செல்ல தாமதம் ஆகும் என பயணிகளுக்கு அறிவித்தனர்.
  அதன்பிறகு ரயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, உயர் மின்கம்பி சீர்செய்யும் பணி நடந்தது. மின் கம்பி அறுந்து விழுந்ததால் அந்த வழியாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து செல்பும் தன்பாத் எக்ஸ்பிரஸ், தாதாநகர் எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் தாமதமாக புறப்பட்டன. சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் கும்மிடிப்பூண்டி,  கொருக்குப்பேட்டை மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மின்கம்பி சரி செய்யப்பட்டு ரயில்கள் 2 மணி நேரம் வரை தாமதமாக சென்றன.

Tags : demonstration ,Valluvar Division ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்