×

கஜா புயல் பாதிப்பு கணக்கெடுப்பை வெளிப்படையாக நடத்த வேண்டும் பி.ஆர்.பாண்டியன் பேட்டி

பட்டுக்கோட்டை,டிச.5: பட்டுக்கோட்டையில் நேற்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது: கஜா புயலால் காவிரி டெல்டா மாவட்டங்களில் 600க்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலும் அழிந்து முடங்கி கிடக்கிறது. 1.25 கோடி தென்னை மரங்கள் அழிந்திருக்கிறது. தென்னை மரம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் அறிவிக்க வேண்டும்.

தென்னைக்கும் குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்து ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு  உரிய உற்பத்தி பொருட்களை முழு மானியத்தில் வழங்க வேண்டும். விவசாயிகள் பெற்றிருக்கக்கூடிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கஜா புயல் பாதிப்பு கணக்கெடுப்புகளை வெளிப்படையாக நடத்த வேண்டும். சில நிவாரண அறிவிப்புகளும், நடைமுறைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் வழங்குவதே விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை தமிழக முதல்வர் உணர்ந்து செயல்பட வேண்டும். உரிய நிவாரண அறிவிப்புகளை பாதிப்புக்கு ஏற்றார்போல் வழங்காவிட்டால் ஒட்டுமொத்த தமிழகமும், காவிரி டெல்டா கஜா புயல் தென்னை விவசாயிகளுக்கு குரல் கொடுக்கிற போராட்ட களத்துக்கு தயாராவோம். இது ஆட்சிக்கு எதிரான போராட்டமாக மாறும்.இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

Tags : interview ,PRPandian ,storm ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு