×

பொன்நகர் அருகே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் புளியமர கிளை அகற்றப்படுமா? நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

கரூர், டிச.5: கரூர் பொன் நகர் அருகே வளைவுப் பாதையில் அச்சுறுத்தும் வகையில் போடப்பட்டுள்ள புளிய மரத்தினை உடனே அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கஜா புயல் கடலோர மாவட்டங்களை தாக்கிய போது, கரூரிலும் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக, கரூர் ராயனூர் சாலையில் பொன்நகர் பிரிவு அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த புளியமரத்தின் ஒரு பகுதி சாலையில் முறிந்து விழுந்தது.போக்குவரத்து இடையூறாக விழுந்த இந்த மரத்தின் கிளைகள் அனைத்தும் அகற்றப்பட்டு, சாலையோரமே போக்குவரத்துக்கு இடையூறாக போடப்பட்டுள்ளது.

வளைவு பாதையோரம் இந்த புளிய மரம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் கரூர் ராயனூரில் இருந்து திண்டுக்கல், பொன்நகர், கோடங்கிப்பட்டி போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினர்களும் பீதியுடன்தான் சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை இந்த பகுதியில் இருந்து முற்றிலும் அகற்றி வேறு பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : motorists ,Pulaimana Branch ,Ponnagar ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...