×

மணல் கடத்திய மாட்டுவண்டிகள் பறிமுதல்

விருத்தாசலம், டிச. 5: விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கோபாலபுரம் அருகே உள்ள மணிமுக்தாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர். மாட்டுவண்டியின்  உரிமையாளர்களான அதே பகுதியை சேர்ந்த அறிவழகன்(30), தண்டபாணி(72) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அதேபோல் ஆலடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடியப்பட்டு இரட்டைக் கல் சருக்கோடையில் இருந்து அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டு வந்த அதே பகுதியை சேர்ந்த பொன்னழகன்(30) என்பவரை கைது செய்ததுடன், அவர் ஓட்டி  வந்த டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்தனர்.



Tags :
× RELATED குருமாம்பேட்டில் பரபரப்பு வீடுகளில்...