கடலூர் மாவட்டத்தில் 2023 அங்கன்வாடிகள் மூலம் 81,117 குழந்தைகளுக்கு சத்துணவு

கடலூர், டிச. 5: கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின்கீழ் 2023 அங்கன்வாடி மையங்கள் மூலம் 15,934 கர்ப்பிணிகளும், 13,470 பாலூட்டும் தாய்மார்களும், 81,117 குழந்தைகளும் இணைஉணவு பெற்று பயனடைந்து வருகின்றனர்.

அங்கன்வாடி மையங்களில்சிறிய குழந்தைகளுக்கு ஏற்ப கைகழுவும் தொட்டி, நவீன கழிப்பிட வசதி, விளையாட்டு பொருட்களும் உள்ளது.2023 அங்கன்வாடி மையங்கள் பருவகல்வி உபகரணங்கள், ஆரம்ப நிலையில் குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி அளிப்பதற்கான உபகரணங்கள், செயல்பாட்டு புத்தகங்கள், கொசுவலை, முதலுதவிபெட்டி, தகவல் பலகை, பாய்கள், சுகாதார பொருட்கள், முகம் பார்க்கும் கண்ணாடி, அடிப்படை மருந்துகள், அசைந்தாடும் நாற்காலி, பாடங்களுக்கான கையேடுகள், பட அட்டைகள், கதை தொகுப்பு அட்டைகள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழா செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக குறிஞ்சிப்பாடி வட்டாரத்திற்கு தேசிய அளவிலான இரண்டு விருதுகள் பெற்றது பாராட்டுதலுக்கு கூரியது. ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் விதத்தில் முழுமூச்சுடன் அங்கன்வாடி மையங்கள்   செயல்பட்டு வருகிறது. இந்த சேவையை அனைவரும் பெற்று பயனடைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories: