×

மதுரையில் குற்றச்சம்பவங்களை தடுக்க 150 சந்திப்புகளில் கண்காணிப்பு கேமரா

மதுரை, டிச. 5: மதுரையில் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, கண்காணிக்கப்படும் என  போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.   இது குறித்து அவர் கூறியதாவது: மதுரை நகரில் குற்றச்சம்பவங்களை தடுகக்வும், நடைபெற்ற குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி மதுரை நகரின் முக்கிய சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டது. இதன் மூலம் நகரம் முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படும். நகரில் சுமார் 150 முக்கிய சந்திப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த சந்திப்புகளில் தலா நான்கு கேமராக்கள் வீதம் பொருத்தப்படவுள்ளன.

ஒவ்வொரு சந்திப்புகளில் சிசிடிவி பொருத்த ரூ.25 ஆயிரம் செலவாகும். பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் வியாபார பெருமக்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் பொருட்டு மாநகர காவல்துறையுடன் இணைந்து இப்பணியினை வர்த்தக சங்கங்கள், தொழில் முனைவோர், பல்வேறு சங்க நிர்வாகிகள் மற்றும் தன்னார்வ நன்கொடையாளர்கள் மேற்கொள்ளலாம். விரும்புவோர், 0452-2520760, 94981-80078 என்ற எண்களில் பேசியும் விருப்பம் தெரிவிக்கலாம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Madurai ,
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...