×

புனித பிரான்சிஸ் சவேரியர் ஆலய தேர்பவனி

விழுப்புரம், டிச. 5: விழுப்புரத்தில் புனித பிரான்சிஸ் சவேரியர் ஆலயத்தில் 144ம் ஆண்டு பெருவிழா தேர்பவனி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் நாப்பாளையத்தெருவில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியர் ஆலயத்தில் 144ம் ஆண்டு பெருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வில்லியனூர் புனிதலூர்து அன்னை திருத்தலம் பிச்சைமுத்து கொடியேற்றத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கு பணியாளர் ஆல்பர்ட் பெலிக்ஸ், உதவி பங்கு பணியாளர் ஜீவா ஆகியோர் உடனிருந்தனர். ஆலயத்திலிருந்து புறப்பட்ட கொடிபவனி வீதிகளில் சென்று வந்தது. பின்னர் 100 அடி உயரமுள்ள கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து 2ம் தேதி வரை திருப்பலியுடன் கூடிய தேர் பவனி நடந்தது. முக்கிய விழாவாக 3ம் தேதி பெருவிழா நடந்தது. ஆடம்பர கூட்டுபாடற் திருப்பலியும், மாலையில் ஆடம்பர தேர்பவனியும் நடந்தது. இதில் புதுச்சேரி கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் கலந்து கொண்டு திருப்பலி நடத்தினார். விழுப்புரம் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : St. Francis Saverrier Temple Derpavani ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை