×

புறநோயாளி சிகிச்சையை புறக்கணித்து அரசு டாக்டர்கள் போராட்டம்

விக்கிரவாண்டி, டிச. 5: விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சையை நேற்று புறக்கணித்து அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் முடிவின்படி 4, 9, 13 ஆண்டு பணிபுரிந்தவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கக்கோரியும், 13 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு தகுதிக்கேற்ற சம்பளம் வழங்க கோரியும், பணப்படி வழங்க கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நேற்று ஒரு நாள் புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் புறநோயாளிகள் பிரிவிற்கு வந்த நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் திரும்பி சென்றனர். மாவட்டத்தில் மொத்தம் 600 மருத்துவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் வரும் 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை அனைத்து அறுவை சிகிச்சையையும் நிறுத்துவது. அரசு கண்டு கொள்ளாவிட்டால் 8ம் தேதி முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜினாமா கடிதங்களை டாக்டர்களிடம் பெறுவது, 10ம் தேதி கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது, 12ம் தேதி மீண்டும் புறநோயாளிகள் பிரிவு சிகிச்சைகளை நிறுத்துவது, 13ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது, 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை தொடர் வேலை நிறுத்தம் நடத்துவது என டாக்டா–்கள் தொடர் போராட்டம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Government doctors ,
× RELATED புனேவில் ரத்த பரிசோதனை அறிக்கையை...