×

சூளகிரி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

சூளகிரி, டிச.5:   கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகாவில் கலெக்டர் உத்தரவின்பேரில், பிடிஓக்கள் அப்தாபேகம், சுந்தரபாஸ்கர் உள்ளிட்டோர் சில மாதங்களாக டெங்கு, பன்றிக்காய்ச்சல், பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 இந்த பணியில், பொறியாளர்கள் ஊராட்சி செயல் அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் அலுவலர்கள், துப்புரவு பணியாளர்களும் பங்கேற்றுள்ளனர். வீடு, வீடாக சென்று இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. அதேபோல் நேற்று கோட்டை தெரு, வாணியர் தெரு, அண்ணா நகர் பகுதிகளில் குடியிருப்புகளிலும், திருமண மண்டபங்களிலும் உள்ள நீர்த்தேக்க தொட்டி, சமையல் அறை, கழிவறை, கழிவுநீர் தொட்டி ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தனர்.  சுகாதாரமற்றவைகளை மூன்று நாளைக்குள் அகற்ற வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும். தினந்தோறும் ஆய்வு பணிக்கு வரும் ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பிளிச்சிங் பவுடர், கொசு ஒழிபு–்பு மருந்துகள் வழங்கப்பட்டது. இந்த ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்தா பேகம், சுந்தரபாஸ்கர், பொறியாளர்கள் மசுதி, தமிழ்அரசி சுகாதார மேற்பார்வையாளர் ராஜாமணி, ஊராட்சி செயலர் ரவிராஜ், மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Tags : area ,Suluggery ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது