×

பெருங்களூரில் 18 நாட்களுக்கு பிறகு மின்மாற்றி சீரமைப்பு

கந்தர்வகோட்டை, டிச.5: புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் 18 நாட்களுக்கு பிறகு மின்மாற்றி அமைக்கப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் கஜா புயலால் சேதமடைந்துள்ளன. அதே போல் மின்மாற்றிகளும் பழுதடைந்துள்ளன.

கஜா புயல் தாக்குதல் நடந்து 18 நாட்களுக்கு பிறகு பெருங்களூரில் பள்ளி அருகே சேதமடைந்த மின்மாற்றியை சேலத்தை சேர்ந்த  மின்வாரிய ஊழியர்கள் நேற்று புதிதாக அமைக்கும் பணியில் 16  பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். பெருங்களூர்  பகுதியில் கஜா புயலால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்தன. அதில் தற்போது 450 மட்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

Tags :
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே...