×

கரூர் வெங்கமேடு பாலத்தின்கீழ் குவிந்து கிடக்கும் கழிவு மண்ணை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கரூர், டிச. 5: கரூர் வெங்கமேடு பாலத்தின்கீழ் கழிவு மண்ணை அகற்றாததால் சுகாதார கேடு ஏற்படுகிறது. கரூர்பகுதியில் வடிகால் தூர்வாரும் நடைபெறுகிறது. கரூர் வெங்கமேடு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள வடிகால் தூர்வாரப்பட்டது. இயந்திரம் மூலம் எடுக்கப்பட்ட கழிவுமண்ணை வடிகால் அருகிலேயே குவித்து விட்டு போய் விட்டனர். வடிகால் மண் அகற்றும் பணிக்கு ஒப்பந்தம் எடுப்பவர்கள் மண்ணை அகற்றி அதனை அந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் அதை செய்வதில்லை. வடிகால் அருகிலேயே குவித்து வைத்து விட்டு போய் விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த இடத்தில் இவ்வாறு கழிவுமண் குவியல் இருப்பதால் அக்கம் பக்கம் இருப்பவர்கள் துர்நாற்றத்தில் அவதிப்படுகின்றனர்.மேலும் மழைதூறல் போடுவதால் அகற்றிய மண் மீண்டும் வடிகாலுக்கே போய் சேருகிறது. மழைநீரில் கரைந்தும் சரிந்தும் கொண்டு வருகிறது. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு கழிவுமண் குவியலை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Citizens ,Karur Vengammedu ,
× RELATED புதிய ஒப்பந்ததாரரை நியமிக்கும் வரை...