×

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் 2ம் கட்ட குறைகேட்பு கூட்டம்

காஞ்சிபுரம், டிச. 5: காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், நவ.17ம் தேதி முதல் நவ.28ம் தேதி வரை காஞ்சிபுரம் நகர பகுதிகளில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து, பொதுமக்களிடம் இருந்து உதவித்தொகை, குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட கோரிக்கை மனுக்கைளை பெற்றார்.
தொடர்ந்து, 2ம் கட்டமாக நேற்று காஞ்சிபுரம் தொகுதிக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கம், புதுப்பாக்கம், வேளியூர், ஊவேரிசத்திரம், கோவிந்தவாடி, புள்ளலூர், படுநெல்லி, தண்டலம், புரிசை, வளத்தூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

வரும் 8ம் தேதி ஆரியம்பாக்கம், ஆட்டுப்புத்தூர், அத்திவாக்கம், ஆலப்பாக்கம், சிங்காடிவாக்கம், இலுப்பப்பட்டு, கரூர், ஒழையூர், மோட்டூர், ஏனாத்தூர், வையாவூர், களியனூர் உள்ளிட்ட பகுதிகளிலும், 10ம் தேதி கொட்டவாக்கம், பரந்தூர், தண்டலம், மேல்பொடவூர், சிறுவள்ளூர், சிறுவாக்கம், காரை, வேடல், கூத்திரம்பாக்கம், தொடூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் குறைகேட்பு முகாமில் கலந்துகொண்டு திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் மனுக்களை பெற உள்ளார்.

இதில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கிட வேண்டும். தொடர் நடவடிக்கைக்கு ஏதுவாக மனுவை நகல் எடுத்து அதில் தொலைபேசி எண் குறிப்பிட்டு மனுக்களை வழங்கினால் உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைக்க ஏதுவாக இருக்கும் என்று எம்எல்ஏ எழிலரசன் தெரிவித்துள்ளார்.

Tags : phase ,constituency ,Kanchipuram Assembly ,
× RELATED 4ம் கட்ட தேர்தல் 96 தொகுதியில் மனு தாக்கல் துவக்கம்