×

பழநி அருகே சேவல் சண்டை 6 பேர் கைது

பழநி, டிச. 4: பழநி அருகே சேவல் சண்டை நடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர். பழநி அருகே அமரபூண்டி, மட்டப்பாறை பகுதியில் தடையை மீறி சேவல்சண்டை நடத்தப்படுவதாக ஆயக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஒரு கும்பல் சேவல் சண்டை நடத்தியது தெரிந்தது. இதுதொடர்பாக போலீசார் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (33), பாலசுப்பிரமணி (28), பால்பாண்டி (32), சரவணன் (21), கார்த்திக்ராஜா (24), சதீஸ்குமார் (28) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 3 சேவல்கள், 5 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags : cockpit ,Palani ,
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து