×

வரி செலுத்தா விட்டால் ஜப்தி, வழக்கு நடவடிக்கை

ஒட்டன்சத்திரம், டிச. 4: ஒட்டன்சத்திரம் பகுதியில் வரி செலுத்தா விட்டால் ஜப்தி, வழக்கு நடவடிக்கை எடுக்கப்படுமென நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்டு 18 வார்டுகள் உள்ளன. பொதுமக்கள், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலி மனையிட வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றில் நிலுவை மற்றும் நடப்பு ஆண்டிற்கான கேட்பு தொகையை நகராட்சி அலுவலகத்தில் உடனடியாக செலுத்தி, அதற்கான ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். வரி செலுத்த தவறினால், கட்டிடங்களில் உள்ள அசையும் பொருட்களை ஜப்தி செய்தல், நீதிமன்றத்தில் வழக்கு தொடருதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதில் ஒவ்வொரு காலாண்டின் முடிவில் தொடங்கும் மாதத்தின் 5ம் தேதிக்குள் குடிநீர் வரியை செலுத்த வேண்டும். தவறினால் தாமத கட்டணத்துடன் சேர்த்து வரியை செலுத்த வேண்டும். நகராட்சி கடைகளுக்கான மாத வாடகையை நடப்பு மாதம் வரை நிலுவையின்றி செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் கடையை பூட்டி சீல் வைத்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு நகராட்சி ஆணையாளர் இளவரசன் தெரிவித்துள்ளார்.

Tags : Japthi ,
× RELATED இழப்பீடு தருவதில் இழுபறி பழநி...