×

கும்பாபிஷேகத்திற்கு இடையூறு குழந்தைகளுடன் தர்ணா

திண்டுக்கல், டிச. 4: நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கும்பாபிஷேகம் நடத்த இடையூறு செய்வதால் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் வந்து கிராமமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். சின்னாளபட்டி அருகேயுள்ளது பெருமாள்கோவில்பட்டி கிராமம். 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு இருதரப்பினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இவ்வூர் மத்தியில் காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு கும்பாபிஷேகம் செய்து 20 ஆண்டுகளாகி விட்டது. இதனால் ஒரு தரப்பினர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் இதை மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட், கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட்டது. அதன்படி டிச.12ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அம்பாத்துரை போலீசார் கும்பாபிஷேக பணிகளை தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது,
இதை கண்டித்தும், கும்பாபிஷேகம் நடத்த உடனே அனுமதி அளிக்க கோரியும்இப்பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி சீருடையில் குழந்தைகளையும் அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க அழைத்து சென்றனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘நீதிமன்ற உத்தரவை மீறி போலீசார் கும்பாபிஷேகம் நடத்த விடாமல் பணிகளை தடுக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : children ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...