×

எஸ்.ஆர். நகர் வடக்கு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அளித்த மனு:

 திருப்பூர் மாநகரப்பகுதியின் 60வது வார்டு எஸ்.ஆர்.நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கிறது. கடந்த 1982ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இப்பகுதியில் இதுவரை எந்த அடிப்படை வசதிகளும் செய்தி தரவில்லை. இங்கு நேதாஜி 8வது மெயின் வீதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பூங்காவிற்கும் குப்பை கிடங்குகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. அவ்வாறு குப்பை கிடங்கு அமைக்கப்பட்டால் குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசும். மேலும், பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அளித்த மனு: பல்லடம் வட்ட, அறிவொளி நகர் அடுக்குமாடி குடியிருப்புகளில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இங்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. இங்கு கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பாடு துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு புழுக்கள் உற்பத்தியாகி வருகிறது.கடந்த சில நாட்களாக பல்வேறு தொற்று நோயால் திருப்பூர் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும், இன்று வரை கொசு மருந்து அடிக்கவில்லை. எனவே, இத்தகைய அடிப்படை தேவைகள நிறைவேற்றி தர வேண்டும் என்றனர்.

சாலையோர வியாபாரிகள் சார்பில் அளித்த மனு:  திருப்பூர் பழைய பஸ் நிலையம் உள்ளே சுமார் 20 ஆண்டுகாலமாக பொதுமக்களுக்கு மலிவு விலையில் தள்ளுவண்டியில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து வருகிறோம். இந்நிலையில், கடந்த இரண்டு மாதமாக போலீசார் இப்பகுதியில் கடை வைக்க விடாமல் தொல்லை செய்து வருகின்றனர். இதன் மூலம் எங்களது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, மீண்டும் பழைய பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூர் இல்லாமல் கடை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.

Tags : SR ,Nagar North resident Welfare Committee ,
× RELATED நிவாரண நிதி முறைகேட்டில்...