×

பெண் லேப் டெக்னீசியன் மின்சாரம் தாக்கி பலி

கரூர், டிச. 4: கரூர் வடக்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் கவிதா(37). இவர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். நேற்று வீட்டில் குளிப்பதற்காக ஹீட்டர் மூலம் வெந்நீர் வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து தண்ணீர் சூடாகி விட்டதா என பார்த்த போது, அவர் மீது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து சம்பவம் குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இளம்பெண் மாயம்: கரூர் மாவட்டம் தோகமலை காவல் சரகம் நாகனூர் ஊராட்சியில் உள்ள வத்தப்பிள்ளையூரை சேர்ந்த முருகன் என்பவரது மனைவி செல்லம் (45). இவரது மகள் கவுசல்யா (18). இவர் கடந்த மாதம் 22ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தனது மகளை காணாததால் தோகமலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் தோகமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன கவுசல்யாவை தேடி வருகின்றனர்.

Tags : Lep Technician ,
× RELATED சின்னதாராபுரம் அருகே அரசு பஸ் மீது பைக் மோதி தம்பதியினர் காயம்