×

விராலிமலை அருகே மலம்பட்டியில் தூய சவேரியார் ஆலய தேர்பவனி திரளான கிறிஸ்துவர்கள் பங்கேற்பு

விராலிமலை, டிச.4: விராலிமலை அருகே உள்ள மலம்பட்டி தூய சவேரியார்ஆலய திருவிழா தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.விராலிமலை அருகே பேராம்பூர்  ஊராட்சி மலம்பட்டியில்  புகழ் பெற்ற தூய சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நடைபெறும் ஆண்டு திருவிழா கடந்த கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருச்சி மறை மாவட்ட அருள் தந்தை யூஜின், கருமண்டபம் ஜுலியன்  கொடியேற்ற திருப்பலி பூஜையை நடத்தினா். தொடரந்து நவநாள் திருப்பலி பூஜைகளை அருட் தந்தையர்கள் நடத்தினர். நேற்று (3ம் தேதி) பகல்  தேர் பவனியன்று   தேவராஜ்,மெல்கிமேயர், ஜெயராஜ், ஜோசப், அருளானந்தம்  ஆகியோர் திருவிழா திருப்பலி  பூஜையை நடத்தினர்.

இதில் மலம்பட்டி மற்றும் அதன் சுற்று பகுதிகளான  பேராம்பூர், கல்லுப்பட்டி, ஆம்பூரபட்டி,  ஆவூர், ஆலங்குடி, வென்மணி, பாக்குடி, இலுப்பூர், சாத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு  பகுதியில் இருந்தும் வெளி மாவட்ட பகுதியில் இருந்தும்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.தொடர்ந்து  மாலை  கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைந்தது. நன்றி திருப்பலி பூஜையை மலம்பட்டி பங்கு தந்தை ரட்சகராஜ் நடத்தினார்.  விழாவையொட்டி நகைசுவைபட்டிமன்றம், கிராமிய இன்னிசை கச்சேரி மற்றும் வாணவேடிக்கைகள் நடைபெற்றது.

Tags : Derpavani ,Sovereign ,Viralimalai ,Malampatti ,
× RELATED ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்