×

கந்தர்வகோட்டை பகுதியில் புயலால் சேதமான பள்ளி மேற்கூரைகள்

கந்தர்வகோட்டை, டிச.4: கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளிகளில் வகுப்பறை கட்டிடங்களின் மேற்கூரைகள் சரிசெய்யப்படாத நிலையில் உள்ளது. உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
 கந்தர்வகோட்டையில் நகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வகுப்பறை கட்டிடத்தின் மேல் ஓடுகள் சேதமடைந்து உள்ளது. அவைகள் சரி செய்யப்படாத நிலையில் அப்பகுதியில் வகுப்புகள் செயல்படாத நிலைமை உள்ளது. இதே போல் வேம்பன்பட்டி நடுநிலைப் பள்ளி, மருங்கூரணி தொடக்கப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதால் அங்கு வகுப்புகள் நடைபெறாமல் உள்ளது. எனவே பள்ளிகளில் புதிய ஓடுகள் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : area ,Gandharvatai ,
× RELATED நெல்லை மாநகர பகுதியில் சாலையில்...