×

பேராவூரணி பகுதியில் கஜா புயலால் பாதித்த மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் விநியோகம்

பேராவூரணி, டிச. 4: கஜா புயலால் பாதித்த பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.கஜா புயலின் கோரதாண்டவத்தால் தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்கள் கடும் பாதிப்புக்குள்ளானது. அத்தியாவசிய தேவைகளான குடிநீர், மின்சாரத்துக்காக பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. மீட்பு பணிகளில் மின்வாரியத்துறை வேகமாக செயல்பட்டு நகர்ப்புற பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்ததைபோல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பல்வேறு கிராம பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. காவிரி கூட்டு குடிநீர் திட்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளில் உள்ள நீரை ஜெனரேட்டர் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஏற்றப்பட்டு நீர் வழங்கப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் உத்தரவின்பேரில் தஞ்சை மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்களுடன் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொறியாளர்களை கொண்ட 18 குழுக்கள் அமைக்கப்பட்டு ஒரே நேரத்தில் 10 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு நீர் ஏற்றும் திறன் கொண்ட ஜெனரேட்டர் மூலம் கிராம பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர்.

Tags : Cauvery ,area ,Peravurani ,storm ,
× RELATED காவிரி நீர் தலைஞாயிறு பகுதிக்கு வந்தடைந்தது