×

கந்துவட்டி கடன்காரர்களிடமிருந்து எனது குடும்பத்தை மீட்க வேண்டும் சப் கலெக்டரிடம் பெண் புகார் மனு

கும்பகோணம், டிச. 4: கும்பகோணம் சப் கலெக்டரிடம் திருமங்கலக்குடியை சேர்ந்த முகமது நாசர் மனைவி பைரோஸ்பானு புகார் மனு அளித்தார். அதில் எனது கணவர், தள்ளுவண்டியில் வைத்து காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரம் செய்ய முடியாமல் குடும்பம் நடத்த வருமானமின்றி சிரமப்பட்டு வருகிறோம். இதனால் எங்கள் பகுதியை சேர்ந்த வட்டி தொழில் செய்பவரிடம் எனது கணவர், கடனாக பணம் வாங்கியிருந்தார். அசலுக்கு மேல் வட்டி கொடுத்தும் மீண்டும் மீண்டும் அந்த நபர்  எங்கள் வீட்டுக்கு வந்து மிரட்டி வீட்டையும் அபகரிக்க முயற்சி செய்கிறார். மேலும் இதுபோல் கந்து வட்டி கொடுப்பவர்கள் சிலரிடம் கடன் பெற்றிருப்பதால் தற்போது மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எங்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கந்துவட்டிகாரர்கள் மிரட்டுவதால் எனது குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே கந்து வட்டி கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Supply Collector ,Kandavatti Debtors ,
× RELATED திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்