×

முத்துப்பேட்டையில் லாட்ஜ் உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு இருவர் கைது: ஒருவருக்கு வலை

முத்துப்பேட்டை, டிச.4: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை டிடிபி சாலையில் வசிப்பவர் அகமது ஜலாலுதீன்(60). இவர் புதிய பேருந்து நிலையத்தில் சொந்தமாக லாட்ஜ் நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த லாட்ஜில் முத்துப்பேட்டை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த குமரய்யா மகன் வசந்தகுமார்(23), கோவிலூரை சேர்ந்த ஆதிமுத்து மகன் வீரசேகர்(23), தெற்கு காட்டை சேர்ந்த ராஜசேகர் மகன் பிரசாந்த் (22) ஆகியோர் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை இந்த 3 வாலிபர்களுக்கும் லாட்ஜ் உரிமையாளர் அகமது ஜலாலுதீனுக்கும் வாடகை பிரச்னை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதனையடுத்து அப்பகுதியினர் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் முன்தினம் நேற்றிரவு லாட்ஜை பூட்டிவிட்டு அகமது ஜலாலுதீன் வீட்டிற்கு சென்றார். அப்போது வசந்த்குமார், வீரசேகர், பிரசாந்த் ஆகிய மூவரும் வீட்டிற்குள் புகுந்து அகமது ஜலாலுதீனை கிரிகெட் மட்டையால் சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டினர். அப்பொழுது அவர் சத்தம்போட்டதால் பொதுமக்கள் ஒன்றுகூடினர். உடனே மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த அகமது ஜலாலுதீனை அப்பகுதியினர் மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இதுகுறித்து கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் அகமது ஜலாலுதீனை வெட்டிய வசந்த்குமார், வீரசேகர் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு தப்பிய பிரசாந்தை தேடி வருகின்றனர்.இந்நிலையில் லாட்ஜ் உரிமையாளர் வெட்டப்பட்ட சம்பவத்தால் முத்துப்பேட்டையில் பதற்றம் ஏற்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் காவல் நிலையம் முன்பு நூற்றுத்தும் மேற்பட்டோர் கூடினர். போலீசார் சதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். மேலும் முத்துப்பேட்டை டிஎஸ்பி இனிகோ திவ்யன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : lorry owner ,
× RELATED தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் போராட்டம் வாபஸ்