×

அறிவியல் கண்காட்சியில் ஜலகண்டாபுரம் பள்ளி மாணவர்கள் சாதனை

ஜலகண்டாபுரம், டிச.4: சேலம் கல்வி மாவட்ட அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில், ஜலகண்டாபுரம் அரசு பள்ளிமாணவர்கள் வெற்றி பெற்றுஇரண்டாம் இடம் பிடித்தனர்.சேலம் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி வீரபாண்டியில் உள்ள மாதிரி பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் மாவட்ட அளவில் பல்வேறு தலைப்பு மற்றும் பிரிவுகளில் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் தூய்மை பாரதம் என்னும் தலைப்பில் ஜலகண்டாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சம்பத்குமார் மற்றும் கோகுல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் ரவி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கந்தசாமி, மற்றும் ஆசிரியர்கள் ராஜேந்திரன், சரவணன், பார்த்தசாரதி, பாலாஜி உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags : Jalakandapuram ,school students ,science exhibition ,
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்