×

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கை

காஞ்சிபுரம், டிச.4: காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான நபார்ட் வங்கியின் 2019-20 ஆம் ஆண்டிற்க்கான சாத்தியமான கடன் திட்ட அறிக்கையினை அனைத்து வங்கியாளர் கூட்டத்தில் கலெக்டர் பொன்னையா வெளியிட்டார். ஒவ்வொரு வருடமும், நபார்ட் வங்கியானது மாவட்டத்தில் உத்தேச கடன் திட்ட அறிக்கியினை தயார் செய்து வெளியிட்டு வருகிறது. அதுபோன்று இந்த ஆண்டும் 2019-20 ம் ஆண்டிற்கான கடன் அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதில் ₹5908.70 கோடி சாத்தியமான முன்னுரிமை கடனாக கொடுக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த கடன் அறிக்கையில், விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழிலுக்கு ₹4041.52 கோடியும், விவசாய கட்டமைப்பிற்க்கு ₹222.99 கோடியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறு மற்றும் சிறு தொழிலுக்கு ₹412.37 கோடியும், வீட்டுக்கடன், கல்விக்கடன், ஏற்றுமதி போன்ற துறைகளுக்கு ₹637 கோடியும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளார் விஜயலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹெப்சுர் ரஹ்மான், நபார்ட் வங்கியின் உதவி பொது மேலாளார் சுப்புராஜ் , ரிசெர்வ் வங்கியின் உதவி பொது மேலாளார் வெங்கடேஷ் , மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் னிவாசராவ் மற்றும் அனைத்து வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Nabard ,Kanchipuram District ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை...